கனத்த மழையின் காரணமாக சித்தாண்டியில் தாழ் நிலப் பகுதிகள் நீரில்

(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு மாட்டத்தில் கடந்த நாட்களாக பெய்து வரும் கனத்த மழை காரணமாக ஏற்ப்பட்ட வெள்ளித்தில் ஏறாவ10ர்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட சித்தாண்டி தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது.

கிரான்புல் ஆறு பெருக்கெடுத்ததின் காரணமாக சந்தனமடு ஆற்றின் நீர் மட்டம் உயர்வடைந்து சித்தாண்டியை அண்மித்த தாழ் நில வயல் பிரதேசங்கள் மற்றும் சித்தாண்டி-4 பிரிவு மருதங்காட்டுகொலணி தாழ் நில பகுதியிலுள்ள சில குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதை படங்களில் காணலாம். 

சித்தாண்டியில் இருந்து ஈரளக்குளம் செல்லும் பாதை வெள்ள நீரினால் முற்றாக மூழ்கியுள்ளதால் ஈரளக்குளம், இலுக்கு, பெருமாவெளி மற்றும் பெரியவட்டவான் பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் சந்திவெளி இறங்குதுறை, மாவடியோடை, மயிலவெட்டுவான் போன்ற இடங்களினால் தங்களின் போக்குவரத்தை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.