இதில் பிரதம அதிதியாக 213 பிரிக்கட் கொமாண்டர் பிரிகேடியர் H.H.P பாலித்த பெர்ணாண்டோ, 3வது வெற்ராலியன் கெமுனு வொச் கொமாண்டிங் ஒப்பிஸர் லெப்டினன் கேணல் சம்பத் ரத்நாயக்க, ஒப்பிஸ் கொமாண்டிங் கெப்டன் H.A.V.A பண்டார, பாடசாலை அதிபர் திரு த.தியாகராசா, R.D.S. சம்மேளன தலைவர். செயலாளர், பொருளாளர் மற்றும் ஆசிரியர்கள், வளவாளர்கள், ஒன்றிய உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், மட்/முதலைக்குடா மகா வித்தியாலய நிலையங்களில் இக்கருத்தரங்கு இடம்பெற்றது.
இதில் பட்டிப்பளைப் பிரதேசத்தக்குட்பட்ட 400 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
இதற்கான வளவாளர்களாக தமிழ் பாடத்திற்கு P.சதீஸ்குமார் ஆசிரிய ஆலோசகர், S.வேந்தராசா ஆசிரியர் மற்றும் கணித பாடத்திற்கு மு.கந்தசாமி
ஆசிரியர் , ஏ.டினேஸ்குமார் ஆசிரியரும், விஞ்ஞான பாடத்திற்கு S.பார்த்தீபன் ஆகிய ஆசிரியர்களும் வளவாளர்களாக அமைந்துள்ளனர்.
இக் கருத்தரங்குக்கான நிதி அனுசரணையை பட்டிப்பளைப் பிரதேச RDS
சம்மேளனமும், உலக நண்பர்களின் தேவைக்கான அமைப்பு வழங்கியுள்ளதோடு பட்டிப்பளைப் பிரதேச இவ்அனைத்து மாணவர்களுக்கான மதிய உணவு, சிற்றுண்டி, ஒலி அமைப்பு வசதிகள் மற்றும் அதிகஸ்ட மாணவர்களுக்கான பேரூந்து போக்குவரத்து சேவைகளையும் கொக்கட்டிச்சோலை 8வது கெமுனு படை-C பிரிவு வழங்கியுள்ளது.
இவ் ஒன்றியத்தினால் விஞ்ஞான பாட கருத்தரங்கு எதிர்வரும் 22-11-2014 அன்று இடம்பெறும் என்பதனையும் அறியத்தருகினர்.












