1978ம் ஆண்டு அரசியல் யாப்பில் செய்யப்பட்ட 18ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தனக்கு மூன்றாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் இருக்கிறதா என எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் தனக்கு தீர்ப்பினை அறிவிக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.
அதன்படி உயர்நீதிமன்ற பதிவாளர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி ஜனாதிபதியின் கோரிக்கை தொடர்பில் 7ம் திகதி மாலை 3 மணிக்கு முன்னர் விளக்கக் கடிதம் அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதம நீதியரசரின் ஆலோசனைக்கு அமைய நீதிமன்ற பதிவாளர் இக்கடிதத்தை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தினால் 17
ஆவது திருத்தச் சட்டம் இல்லாது ஒழிக்கப்பட்டு 18ஆவது திருத்தச் சட்டம்
அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஜனாதிபதி தேர்தலில்
எத்தனைத் தடவை வேண்டுமானாலும் ஒருவர் போட்டியிடலாம் என்ற நடைமுறை
அமுலுக்கு வந்துள்ளது.
ஆனாலும் இரண்டாவது பதவிக்காலத்தில் இந்தத்
திருத்தினை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ கொண்டுவந்தமையினால்
மூன்றாவது தடவையாக ஜனாதிபதி போட்டியிட முடியாது என்ற வாதமும்
முன்வைக்கப்பட்டு வருகின்றது. இதனையடுத்து மூன்றாவது தடவையும் தான்
போட்டியிடலாமா என்பது தொடர்பில் ஆலோசனை வழங்குமாறு உயர் நீதிமன்றத்தை
ஜனாதிபதி கோரியிருக்கின்றார்.














