மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம் இன்று பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளரும் பழைய மாணவர் சங்க தலைவருமான வெ.தவராஜா அவர்களின் தலைமையில், சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் சமாதிக்கு மலர்மாலை அணிவித்து வணக்கம்செலுத்தி கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, தொடர்ந்து புதிய நிருவாகம் தெரிவுசெய்யும் நிகழ்வுக்கு சாதகமான நிலை இல்லாத காரணத்தினால் அந் நிகழ்வு இடம் பெறவில்லை. மிக விரைவில் மீண்டும் பொதுக் கூட்டம் இடம்பெறலாம் என வருகைதந்த உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.












