மட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் விமர்சையாக இடம்பெற்ற ஆசிரியர் தினக் கொண்டாட்டம்

வித்தியாலய அதிபர் ச.கணேசமூர்த்தி தலைமையிலும், உயர்தர வகுப்பு மாணவர்களின் ஒழுங்குபடுத்தலிலும்   நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் ஆசிரியர்களுக்கான பந்துமாற்றுதல்,ஓரங்க நாடகம் போன்ற நிகழ்வுகளும்  இடம்பெற்றன.

மாணவர்களின் சிறப்பான வரவேற்புடனும், விருந்துபசாரத்துடனும் நடைபெற்ற  இந்நிகழ்வுக்கு ஆசிரியர்கள் அனைவரும் முதல் முதலாக பாடசாலைச் சீருடையுடன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.