வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவின் உன்னிச்சை- இராசதுரைநகர் கிராமத்தில் சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட நிரந்தர வீடுகள் இன்று 7ம் திகதி உரிய குடும்பங்களுக்கு கையளிக்கப்பட்டது.
சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் நிதியுதவியுடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களையும் மக்களையும் மீள் கட்டியெழுப்பும் மனிதாபிமான உதவியளிப்பு வேலைத்திட்டத்தின்கீழ் இவ் இராசதுரைநகர் கிராமத்தில் ரூபா.730,000 பெறுமதிமிக்க 15 வீடுகள் 15 குடும்பங்களுக்கு நிர்மானித்து இன்று வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் அவர்களும், சிறப்புஅதிதிகளாக சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி (கொழும்பு) சுபாஜி, சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் - கிழக்கு திட்ட இணைப்பாளர் ரி.மயூரன் மற்றும் விசேட அதிதிகளாக பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மலராஜ்,ஆயித்தியமலை பொலீஸ் பொறுப்பதிகாரி போன்றோர் கலந்துகொண்டனர்.
கடந்த காலத்தில் போரினால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இப்
பிரதேசமும் அடங்கும். அதேபோன்று இக் கிராம மக்களும் மிக கடுமையாக
பாதிக்கப்பட்டு உயிர்,உடமைகளை இழந்துள்ளனர்.
இதற்கு முன்னர் இம் மக்கள் தற்காலிககொடில்களிலும்,களிமண் குடிசைகளிலும் மற்றும் சேதமைடைந்த வீடுகளிலும் வாழ்ந்துவந்தனர்.
இதற்கு முன்னர் இம் மக்கள் தற்காலிககொடில்களிலும்,களிமண் குடிசைகளிலும் மற்றும் சேதமைடைந்த வீடுகளிலும் வாழ்ந்துவந்தனர்.
இவ்வாறான மக்களுக்கு, இந் நிறுவனத்தினால் நிர்மானித்து கொடுக்கப்பட்டிருக்கும் இப் புதிய வீடுகள் பேருதவியாக அமைந்துள்ளதனை அம்மக்கள் மூலம் அறியமுடிகின்றது.





























