ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு விரைவில் கோரப்படும் - தேர்தல்கள் ஆணையாளர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றுமொரு காலத்துக்கு போட்டியிடுவது தொடர்பாக விருப்பம் தெரிவித்து கைச்சாத்திட்ட வர்த்தமானி, தேர்தல் செயலகத்துக்கு தொலைநகல் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி விரைவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்பட்டு அதன் பின்னர் தேர்தல் நடத்தப்படும் தினம் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பிரகடனத்தில் கையொப்பமிட்டமை குறிப்பிடத்தக்கது.