கிழக்கு பல்கலைக்கழக நூலகத்தில் “ஆவண பாதுகாப்பும் பேணுகையும்” என்ற தலைப்பில் நடைபெற்ற பயிற்சிப்பட்டறை

(சித்தாண்டி நித்தி) கிழக்கு பல்கலைக்கழக நூலகமானது பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் சங்கத்துடன் இணைந்து கிழக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர்களுக்கு ஒரு நாள் பயிற்சிப்பட்டறை கடந்த 14ம் திகதி (வெள்ளிக்கிழமை)  கிழக்கு பல்கலைக்கழக நூலகரான திருமதி. தவமணிதேவி அருள்நந்தி தலைமையில் நூலகத்தில் நடைபெற்றது.

நூலக ஆவண பாதுகாப்பும் பேணுகையும் என்ற தலைப்பில் நடைபெற்ற பயிற்சிப்பட்டறை Binding பற்றிய பயிற்சியை  வழங்கினர்.

நடைபெற்ற பயிற்சிப்பட்டறைக்கு வளவாளர்களாக தேசிய நூலக ஆவணமாக்கல் சபையிலிருந்து வருகை தந்திருந்தனர்.

நடைபெற்ற பயிற்சிப்பட்டறைக்கு ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் மொழி பெயர்ப்பாளராகவும் கிழக்கு பல்கலைக்கழக உதவி நூலகரான திருமதி.காயத்திரி நவீரதன் கலந்துகொண்டிருந்தார்.

நூலக ஆவணமாக்களை எவ்வாறு பாதுகாத்து பேண முடியும் என்பது பற்றிய விரிவான விளக்கங்களுடன் ஆரம்பமான பயிற்சிப்பட்டறை Binding செய்வது பற்றிய விரிவான பயிற்சியுடன் நடைபெற்றது.

பயிற்சிப்பட்டறை முடிவில் கருத்துதெரிவித்த பங்குபற்றுனர்களாக பயிற்சிப்பட்டறைக்கு வருகைதந்த அனைவரும் தாங்கள் இதற்கு முன்னர் இதுபோன்ற முக்கியத்துவமான பயிற்சிபட்டறையில் பங்குகொள்ளவில்லை என்ற நேர்வினையான கருத்தக்களையும் முழுமையான திருப்தியையும் வெளியிட்டிருந்தனர்.

இந்த பயிற்சிப்பட்டறையை நடாத்திய வளவாளர்கள் பங்குபற்றுனர்கள் அனைவரதும் கற்கும் ஆவர்வத்தையும் முன்னிட்டு திருப்தியடைந்ததோடு இனி வரும் காலங்களிலும் தாங்கள் இதுபோன்ற பயிற்சிப்பட்டறையை நடாத்தவுள்ளதாக கருத்துத் தெரிவித்தனர்.

பயிற்சிப்பட்டறையின் இறுதியில் பங்குபற்றுனர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது.