எரிபொருள் விலையை சீரான மட்டத்தில் பேண நடவடிக்கை

நாடு முழுவதும் எரிபொருள் விலையை சீரான மட்டத்தில் பேணுவதற்கு 2014.11.01 முதல் அமுலுக்கு வரும் வகையில், நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.

இதற்கமைய, போக்குவரத்திற்காக அறவிடப்படும் கட்டணம் முழுமையாக நீக்கப்படவுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் எஸ்.அமரசேகர குறிப்பிட்டார்.


இதற்கமைய, நாட்டின் அனைத்து பகுதிகளிலும், கொழும்பில் விற்பனை செய்யப்படும் விலைக்கு, எரிபொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமென அவர் சுட்டிக்காட்டினார்.