பதுளை- கொஸ்லந்தை மீரியபெத்த தோட்ட மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு கல்லடி- புதுமுகத்துவாரம் பகுதி மக்களால் கடந்த 4ம் திகதி செவ்வாய்கிழமை ஒருதொகுதி நிவாரணப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிவாரணப்பொருட்களை புதுமுகத்துவாரம் மக்கள் சார்பாக அக் கிராமத்தைச்சேர்ந்த சிலர் நேரடியாக சென்று முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு இலங்கை இராணுவத்தின் உதவியுடன் பொருட்களை வழங்கிவைத்தனர்.
கடந்த சுனாமி அனர்த்தத்தின்போது பதுளை தோட்டப்பகுதி மக்கள் எமது பிரதேசத்திற்கு வருகைதந்து நிவாரண உதவிகள் புரிந்துள்ளனர். இதற்கு எப்போதும் தாம் நன்றியுடையவர்களாக இருப்பதாக முகத்துவாரத்தைச்சேர்ந்த நிவாரணப்பணியில் ஈடுபட்ட நபர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
![]() |
















