அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தையொட்டிய விசேட பூஜை


(சிவம்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது 69 ஆவது பிறந்த தினத்தையொட்டிய விசேட பூஜை அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதம குரு இரங்க வரதராஜ குருக்கள் தலைமையில செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்றது.

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்

மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வில் ஜனாதிபதியின் இணைப்பாளர் அருண்தம்பிமுத்து, மண்முனை வடக்கு உதவிப் பிரதேச பிரதேச செயலாளர் எஸ் யோகராஜா, இந்து சமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் பி. சறோஜினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் இணைப்பாளர் ஆலய வளாகத்தில் மரமொன்றை நட்டுவைத்தமை குறிப்பிடத்தக்கது.