வாகரையில் கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களின் தெரு வெளி அரங்க ஆற்றுகை




கல்குடா கல்வி வலயமும் கரையோரம் பேணல் திணைக்களமும் வாகரை மகா வித்தியாலயத்தில் நடத்தி வரும் ' வாகரையின் கண்டல் தாவரங்களைப் பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளின் கீழான நிகழ்ச்சிகளில் ஒன்றாக இன்று (08.11.2014) கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களின் 'கண்டலைக் காப்போம்' எனும் தெரு வெளி அரங்க ஆற்றுகைஇடம்பெற்றது.


இந்நாடகம் நாடகப் பாட ஆசிரியர் து.கௌரீஸ்வரன் அவர்களால் எழுதி நெறிப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஒப்பனையினை ஓவியப் பாட ஆசிரியர் க.நிமலதாசன் அவர்கள் மேற் கொண்டிருந்தார்.

இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் கவர்ந்த, பலராலும் பாராட்டப் பெற்ற ஆற்றுகையாக இத்தெருவெளி அரங்காற்றுகை இருந்தமை குறிப்பிடத்தக்கது.