அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் பிறந்தினமான எதிர்வரும் 18.11.2014ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களின் ஏற்பாட்டில் அப்பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள பிரபலமான ஆலயங்களில் விசேட பூசை நிகழ்வுகள் ஜனாதிபதிக்கும் நாட்டுமக்களுக்கும் நல்லாசி வேண்டி இடம்பெறவுள்ளதுடன் அன்றைய தினம் மரநடுகை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
அவ்வகையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் பூசை நிகழ்வுகள் காலை 08.00 மணிக்கும், கலாசார மண்டபத்தில் மரநடுகையும் இடம்பெறவுள்ளது. இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம், போரதீவுப்பற்று பிரதேச கலாசார உத்தியோகஸ்தர், உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் ஆரையம்பதி செல்வாநகர் சிவனேஸ்வரர் ஆலயத்தில் காலை 08.00மணிக்கு பூசையும், மரநடுகையும் இடம்பெறவுள்ளது.
வாகரை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வாகரை சௌபாக்கிய பிள்ளையார் ஆலயத்தில் காலை 08.00மணிக்கு பூசையும், மரநடுகையும் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொள்ளவுள்ளார்.
என பிரதேச செயலகங்களின் கலாசார உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.