வவுணதீவு பிரதேச செயலகத்தின் வாழ்வின் எழுச்சி திணைக்கப்பிரிவினால் வாழ்வாதார அபிவிருத்தி திட்டத்தின்கீழ் திவிநெகும பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் நேற்று (5ம் திகதி) கறவைப்பசுக்கள் வழங்கிவைக்கப்பட்டது.
தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள் ஐவருக்கு தலா ஒரு பசுமாடு வீதம் வழங்கிவைக்கப்பட்டது. இப் பசு ஒன்றின்விலை ரூபா 60,000 எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மலராஜ், வாழ்வின் எழுச்சி முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.சத்தியசீலன் போன்றேர் கலந்துகொண்டனர்.












