பால்சேனை அ.த.க பாடசாலைகளுக்கான இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு

(சித்தாண்டி நித்தி) கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பால்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த (4) செவ்வாக்கிழமை பாடசாலையின் அதிபர் திரு.பொ.இராமச்சந்தின் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

நடைபெற்ற இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வுக்கு கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா பிரதம அதிதியாக வருகைதந்ததுடன் சுப வேளையில் பாடசாலைக்கான முதலாவது இணைத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். இதேவேளை அதிதிகளாக பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான திரு.த.அனந்தரூபன் (திட்டமிடல்), திருமதி.சு.குலேந்திரகுமார் (நிர்வாகம்), ஆசிரிய ஆலோசகர் திரு.த.குலேந்திரகுமார் (தகவல் தொழில்நுட்பம்)  ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். 

பாடசாலைக்கான இணையத்திளத்தினூடாக பாடசாலையின் பல்வேறுபட்ட தகவல்கள் மற்றும் பாடசாலையின் கல்விசார் தகவல்கள் அடங்கிய விடயங்களை (www.palchenai.sch.lk) இவ் இணையத்தளம் மூலம் இலகுவாக அறிந்து கொள்ளகூடியதாகவுள்ளது என பாடசாலையின் அதிபர் இராமச்சந்தின் அங்குரார்ப்பண நிகழ்வின்பொழுது தெரிவித்தார். 

கல்குடா கல்வி வயலயத்திற்குட்பட்ட பெரும்பாலான பாடசாலைகளுக்கான இணையத்தளம் தற்பொழுது பாவனையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.