தமிழ் மொழித்தின தேசிய மட்டப் போட்டியில் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் இரண்டாம் இடத்தைப் பெற்ற மாணவர்கள்

(எஸ்.சதீஸ்)
அகில இலங்கைத்தமிழ் மொழித்தினதேசிய மட்ட நாடகப் போட்டியில் இவ் வருடமும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள மட்/மமே/கரடியனாறு மகாவித்தியாலய மாணவர்கள் இரண்டாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இப் பாடசாலையிலுருந்து கடந்த இரண்டு வருடங்களும்இந் நாடகப் போட்டியில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளனர். இவ்வருடத்துடன் தொடரச்சியாக மூன்று தடவைகள் இரண்டாம் இடத்தினைப் பெற்றுப் பாடசாலைக்கும்,எமது கல்விவலயத்திற்கும்,மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றியீட்டிய மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்களான திருமதி.பவிதாவிஜயரூபன், வ.குணபாலசிங்கம் ஆகியோரை அதிபர். இ.செந்தில்நாதன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.முருகேசப்பிள்ளை ஆகியோரும் பாடசாலைஅபிவிருத்திச் சங்கம், பழையமாணவர் சங்கம் ஆகியோரும் வாழ்த்துகின்றனர்.