(படுவான் பாலகன்) அண்மையில் வெளிவந்த புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் அதிகூடிய மாணவர்களை சித்தியடைய வைத்த முதலைக்குடா கனிஸ்ட வித்தியாலயத்தில் இன்று(03) திங்கட்கிழமை வித்தியாலய மண்டபத்தில் வித்தியாலய அதிபர் திரு.சு.அரசரெத்தினம் அவர்களின் தலைமையில் ஆசிரியர்களையும் சித்தியடைந்த மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது சித்தியடைந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து வித்தியாலய அதிபரினால் அதிகூடிய புள்ளியை பெற்ற மாணவருக்கு 2000ரூபாயும் மற்றைய 10மாணவர்களுக்கும் ரூபா 1000வீதமும் வங்கிப் புத்தகத்தில் இட்டு வங்கிக் கணக்கு புத்தகம் ஒன்று வித்தியாலய அதிபரினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதுடன், கிராம உதவும் கரங்களால் பரிசில்களும் வழங்கப்பட்டது. கற்பித்த ஆசிரியர்களுக்கு பெற்றோர்களால் பொன்னாடை போர்க்கப்பட்டு பிள்ளைகளால் பரிசில்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான திரு.ஞா.சிறிநேசநன், திரு.எஸ்.மகேந்திரகுமார், திரு.கரிகரராஜ், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.ந.தயாசீலன், வேள்ட்விஸன் நிறுவன பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் திரு.இ.அமுதராஜ், ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.சு.மாணிக்கப்போடி, ஆரம்பக்கல்வி சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திரு.பே.குமாரலிங்கம், மண்முனை தென்மேற்கு கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், மக்கள் வங்கி முகாமையாளர் திரு.இ.மோகனதாஸ், குணா மல்ரிசொப் உரிமையாளர் திரு.குணசேகரம், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.