யூனியன்அஷ்யூரன்ஸ் நிறுவனத்தினால் புலமைப் பரிசில்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு ஒக்போர்ட் கல்லலூரியுடன்  யூனியன்அஷ்யூரன்ஸ் நிறுவனமும் இணைந்து கற்கைநெறிக்கான புலமைப்பரிசில்கள் வழங்கிவைக்கப் பட்டது

இதில் மட்டக்களப்பு ஆனைப்பந்தி இ.கி.மி வித்தியாலயம், கருவேப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயம், ஊறணி சரஸ்வதி வித்தியாலயம் மற்றும் ஆரையம்பதி இ.கி.மி வித்தியாலயம் போன்ற பாடசாலையில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு கணணி சார்ந்த கற்கைநெறிகளுக்கான புலமைப்பரிசில்களின் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது.

யூனியன்அஷ்யூரன் நிறுவனத்தின் கிழக்கு வலய முகாமையாளர்  ம.ஜெகவண்ணன் அவர்களின் ஆலோசனைக்கமைய இடம்பெற்ற இந் நிகழ்வில்,  யூனியன்அஷ்யூரன் நிறுவனத்தின்  கிழக்கு வலய  ஆட்சேர்ப்பு முகாமையாளர் அ.நிரோஷன் , முகாமையாளர் நிசாந்தன் ஒக்போர்ட் கல்லூரியின் நிருவாகப் பணிப்பாளர் ம.நீலவண்ணன் மற்றும் பாடசாலை அசிரியர்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.