சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் புதிதாக கடமையேற்ற அதிபருக்கு மகத்தான வரவேற்பு

(நித்தி)  கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயத்தில்  புதிதாக கடமையேற்ற அதிபர் திரு.கனகரெட்னம் பகீரதன் அவர்களுக்கு பாடசாலை சமூகம்சார்பாக மகத்தான வரவேற்பு நிகழ்வொன்று இன்று (19) புதன்கிழமை காலை ஒன்றுகூடலில் நடைபெற்றன. 

சித்தாண்டி சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய திரு.க.பகீதரன் அதிபர்  கடந்த மாதத்தில் நடைபெற்ற அதிபர்களுக்கான நேர்முகத்தேர்வில் தெரிவுசெய்யப்பட்டு இன்று காலை சுபவேளை 7.15 மணியளவில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்கான புதிய அதிபராக பாடசாலையில் கடமையாற்றிய அதிபர் திரு.தினகரன் ரவி முன்னிலையில் தனது கடமையை பெறுப்பேற்றார். பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய திரு.தி.ரவி அவர்கள் கல்குடா கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் (கல்விமுகாமைத்துவம்) பதவி உயர்வு பெற்று செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பாடசாலைக்கு அதிபராக கடமையேற்ற அதிபர் பகீதரன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் வழங்கவென சித்தாண்டி அயல் பாடசாலையிகளின் அதிபர்களும் வருகைதந்திருந்தனர்.