(சிவம்)
அகில இலங்கை திவிநெகும அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் சங்க அங்கத்தவர்களின் குறைபாடுகளைப் பற்றி ஆராயும் வருடாந்த மாநாடு மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் நேற்று (08) நடைபெற்றது.
மாவட்ட தொழில் சங்கத் தலைவர் என்.ரவீந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் சங்க அங்கத்தவர்களின் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் பற்றி ஆராயப்பட்டன.
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லிபாறுக், மேல்மாகாணசபை உறுப்பினரும் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஜெகத் குமார, கடுவெல நகரபிதா டீபல் ஹெட்டியாராச்சி, மட்டக்களப்பு மாவட்ட திவிநெகும திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஜே.எப். மனோகிதராஜ், தாய்ச் சங்கப் பொருளாளர் பாசில் அன்வர்இ மாவட்ட தொழில் சங்கத் தலைவர் என்.ரவீந்திரகுமார் மற்றும் கலந்து கொண்டனர்.












