(பேரின்பராஜா சபேஷ்) கிழக்கு மாகாண சபையில் நிலவுகின்ற நிர்வாகச் சீர்கேட்டுச் சூழ்நிலை,
அரசின் அசமந்தப் போக்கு என்பதனைக் கருத்தில் கொண்டு அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் கட்சியின் 3 கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் இன்று முதல்
ஆளும் தரப்பிலிருந்து பிரிந்து தனித்து இயங்குவதற்கு கட்சியின் உயர்பீடக்
கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் எந்த தரப்பினரை தமது கட்சி ஆதரிப்பது என்பது தொடர்பாக ஆராயும் விசேட உயர்பீடக் கூட்டம் நேற்று கொழும்பில் கட்சியின் தலைவர் அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது.
கட்சியின் தவிசாளரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களின் தலைமையில் உறுப்பினர்களான எம்.எஸ்.சுபைர், சிப்லி பாறுாக் ஆகியோரே மேற்படி தனித்து இயங்கவுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் கட்சி எடுக்க வேண்டிய நிலைப்பாடு தொடர்பாக மிக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. இங்கு கடந்த இரண்டு வருடங்களாக முஸ்லிம்கள் முகம்கொடுத்த இனவாத நடவடிக்கைகளும், அதற்கு எதிராக அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதும் அங்கத்தவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட அதேவேளை இதே ஜனாதிபதி மீண்டும் ஆட்சிக்கு வருகின்றபொழுது இவ்வினவாத நடவடிக்கைகள் தொடராது என்பதற்கு உத்தரவாதம் என்ன ? மற்றும் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுக்கத்தவறிய அரசாங்கம் எதிர்காலங்களில் நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவாதம் இருக்கின்றதா ? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
மறுபுறத்தில் எதிரணிக்கூட்டு கட்சிகளின் ஒரேயொரு இலக்கு ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாகவே இருக்கின்றது. ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை சிறுபான்மைக்கு சாதகமானது. அது தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டை மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் எடுத்திருந்தார்கள். அதே நிலைப்பாட்டிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட இன்றுள்ள சகல முஸ்லிம் கட்சிகளும் இருப்பதாகவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலைப்பாட்டிற்கான காரணம் சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஒருவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கான 50 வீத வாக்குகளைப் பெறுவது கடினமாகும். அந்த வகையில் இந்த நாட்டின் ஆட்சியைத் தெரிவு செய்வதில் ஒரு பாரிய பங்கு சிறுபான்மைகளுக்கு இருக்கின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் யுத்தம் முடிவுற்ற சூழ்நிலையில் ஒரு வித்தியாசமான தேர்தல் முடிவுகள் வந்த சந்தர்ப்பமாக இருந்தபோதிலும் சாதாரண சூழ்நிலைகளின் கீழ் நடைபெறுகின்ற ஒரு ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மைகளின் ஆதரவு இல்லாமல் ஒருவர் ஜனாதிபதியாக வருவது சிரமமாகும்.
இதற்கு உதாரணமாக 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இந்நாட்டில் முதலாவது சிறுபான்மையினராகிய தமிழ் சமூகம் தமது வாக்குகளைப் பயன்படுத்தியிருந்தால் அப்போது நாட்டில் வேறு விதமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். எனவே, சிறுபான்மை வாக்குப்பலத்தை ஒரு சிறுபான்மை சமூகம் பாவிக்காததனால் இந்த நாட்டின் தலை எழுத்து மாற்றப்பட்டிருக்கின்றது என்பது சிறுபான்மை சமூகத்திற்கு ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதில் இருக்கின்ற அரசியல் பலத்தையே அது காட்டுகின்றது.
அதேநேரம் இனவாத நடவடிக்கைகளுக்கு துணை போனதாக அல்லது கண்டும் காணாதவர்களாக இருந்ததாக குற்றம் சாட்டப்படுகின்ற இன்றைய அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தல் வந்ததும் அதே சிறுபான்மைச் சமூகங்களை திரும்பிப்பார்க்கின்ற சூழ்நிலையையும் இதே ஜனாதிபதித் தேர்தல் முறைமைதான் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் ஜனாதிபதி ஆட்சி ஒழிப்பு முறை இந்நாட்டில் ஒர் இன ஆட்சி முறைமைக்கு வித்திட்டுவிடக்கூடிய தன்மை இருக்கின்றது.
மறுபுறத்தில் இன்று இருக்கின்ற விகிதார பொதுத்தேர்தல் முறை 1978 ஆம் ஆண்டு ஜே. ஆர். ஜயவர்த்தனாவின் அரசாங்கத்தினால் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டு 1989 ஆம் ஆண்டே நடைமுறைப்படுத்தப்பட்டது. அதிலிருந்து இன்றுவரை 6 பொதுத் தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. இதில் 1989 ஆம் அண்டு 125 ஆசனங்களை அன்றைய ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி பெற்றது. இத்தேர்தல் முழுக்க முழுக்க ஊழல், வாக்கு மோசடி நிறைந்த ஒரு தேர்தல் என்று அன்று குற்றம் சாட்டப்பட்டது மட்டுமல்லாமல் மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமானும் ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே போட்டியிட்டிருந்தார்.
இதேபோன்று யுத்த வெற்றிக்களிப்பில் மக்கள் இருந்த சூழ்நிலையில் நடைபெற்ற 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மட்டும் 127 ஆசனங்களைப் பெற்றிருந்தது. இந்த இரண்டு விசேட சூழ்நிலைகளில் நடைபெற்ற தேர்தல்களைத் தவிர ஏனைய 4 பாராளுமன்றத் தேர்தல்களிலும் எந்தவொரு கட்சியும் தனித்து அறுதிப்பெரும்பான்மையை பெற முடியவில்லை. ஆட்சி அமைப்பதற்கு சிறுபான்மைக் கட்சிகளின் குறிப்பாக முஸ்லிம் கட்சிகளின் ஆதரவிலேயே தங்கியிருந்தன.
எனவே, சுருங்கக் கூறின் இன்றிருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் முறையில் சிறுபான்மைக்கட்சிகளின் ஆரதவின்றி எந்தவொரு பெரும்பான்மைக்கட்சியும் சாதாரண சூழ்நிலைகளின் கீழ் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற முடியாது. அதேபோன்று ஜனாதிபதியாக வர விரும்புகின்ற ஒருவர் சிறுபான்மைகளின் ஆதரவின்றி அதனை இலகுவில் அடைய முடியாது.