(சித்தாண்டி நித்தி) கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் பேண்தகு விவசாய டிப்ளோமா கற்கைநெறிக்கான ஆரம்ப வைபவம் (2014-2015) இன்று (8) சனிக்கிழமை பல்கலைக்கழக விவசாய பீட விரிவுரை மண்டபத்தில் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கிட்ணன் கோபிந்தராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றன.
நடைபெற்ற பேண்தகு விவசாய டிப்ளோமா பாடநெறிக்கான ஆரம்ப வைபவ நிகழ்வுக்கு கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி கலாநிதி போ.சிவராசா திணைக்கள தலைவர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பாடநெறியை தொடரவுள்ள மாணவர்கள் (34) என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
நடைபெறவிருக்கும் பேண்தகு விவசாய டிப்ளோமா பட நெறியானது விவசாயம் சார்ந்த விளக்கங்களையும் செயல் முறைகளையும் உள்ளடக்கி அமைந்ததுடன் இத்துறையில் டிப்ளோமா நிலையில் கற்கையை முடித்து வெளியேறும் மாணவர்கள் தங்களின் எதிர்கால விவசாயம் சார்ந்த தொழில்வாய்ப்பு மற்றும் சுயதொழில் முயற்சிகளுக்கும் உறுதுணையளிப்பதாக அமையுமென ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும்போது விவசாயத்துறை பீடாதிபதி கலாநிதி போ.சிவராசா தெரிவித்தார்.
இதன்போது பாடத்துறை சார்ந்த விளக்கங்கள் மற்றும் கற்கைநெறி தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)










