என மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.ந.தயாசீலன் இவ்வருடம் மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்று க.பொ.த(சா.த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான ஆங்கிலப் பாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு உயர் தொழிநுட்ப கல்லூரியின் ஏற்பாட்டிலும் மட்.கச்சேரியின் அனுசரணையுடனும் இன்று(16) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போது குறிப்பிட்டார்.
இதில் மட்டக்களப்பு மாவட்ட உயர் தொழிநுட்ப கல்லூரியின் பணிப்பாளர் திரு.எஸ்.ஜெயபாலன் அவர்களும் ஆங்கிலப்பாட விரிவுரையாளர்களும், அங்கு கல்வி கற்கின்ற ஆங்கில பாட மாணவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான விரிவுரைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
வித்தியாலயத்தின் அதிபர் திரு.பொ.நேசதுரை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.ந.தயாசீலன், மட்.மாவடிமுன்மாரி அ.த.க.பாடசாலை அதிபர் திரு.மகேசரெத்தினம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.












