சமுகத்தை ஒழுங்கமைக்க சட்டம் அவசியம் என்பதால் சட்டத்திற்கு மேலானவர் எவரும் இல்லை! ம.உ.ஆ. இணைப்பாளர் அப்துல் அஸீஸ்


மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தால் இயற்றப்படுகின்ற நியதிச் சட்டங்களையும், வழக்காறுகளையும், நீதிமன்றங்களால் வழங்கப்படும் முத்தீர்ப்புக்களையும் மூலங்களாகக் கொண்டு சட்டம் உருவாக்கப்படுகின்றது. ஒரு சமுகத்திலுள்ள எல்லோரும் சட்டத்திற்கு கட்டு;ப்படுகின்றனர். சமுகத்தை ஒழுங்கமைக்க சட்டம் அவசியம் என்பதால்  சட்டத்திற்கு மேலானவர் எவரும் இல்லை என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

ஏறாவூர் சமூக அபிவிருத்தி மன்றத்தினால்  கிராமமட்ட தலைவர்களுக்கான 'பொதுச் சட்டம்' எனும் தொனிப் பொருளிலான செயலமர்வு ஏறாவூர் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நிறுவனத்தின் இணைப்பாளர் ஜனாப். எஸ்.ஏ.சி. நஜிமுதீன் அவர்களின்; தலைமையில் இன்று (22.11.2014) நிகழ்ந்த போது, வளவாளர் அஸீஸ் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, 
குற்றம் புரிபவர்களை தண்டிப்பதை நோக்கமாகக் கொண்டே 'குற்றவியல் சட்டம் எழுதப்பட்டுள்ளது. ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின், தடுப்புக் காவலில் இருக்கும் போது அவரை சந்தேக நபர் என்றே கருதப்பட்டு மனிதாபிமான முறையில் நடத்தப்படல் வேண்டும். வழக்கு நடபடி முறைகளின் பின் குற்றவாளி என தீர்ப்பளி;க்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மாத்திரமே உண்டு.
ஆனால் 'சிவில் சட்டம்' என்கின்ற போது இது குற்றவியல் சட்டங்களுக்குள் அடங்காத வேறு எந்தவொரு சட்டமுறைமைக்குள் அடங்கும் சட்டங்களாகும்;. இது தனி மனிதர்களுக்கிடையேயான பிரச்சினையாகும். தன்னாலேயே தன்னுடைய செலவிலேயே வழக்குத் தொடர வேண்டும். இப்பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் ஆவண ரீதியான ஆதாரங்கள் அவசியம். இதனால் சகல விடயங்களிலும் எழுத்து மூலமான ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

இன்று வங்கிக் கடன்பெறுபவருக்கும்; வாகனம் குத்தகைக்கு எடுப்பவருக்கும் பிணையாக பலர் நிற்கின்றனர். தெரியாத மொழியிலுள்ள பத்திரத்தில் கையொப்பமிடுகி;ன்றனர்.  பயன்பெற்றவர்கள் உரிய காலத்தி;ல் கொடு;ப்பனவுகளைக் கட்டாது விடுகி;ன்ற போது, பிணையாளிகள் மாட்டிக் கொள்கி;ன்றனர். மட்டுமன்றி பொலிஸ் நிலையமென்றும், நீதிமன்றமென்றும் அலைந்து திரிகின்றனர். எனவே கால, சூழலுக்கு ஏற்றவாறு சட்டம் மாறுகிறது. மட்டுமன்றி பிரயோகம் தொடர்பில் தண்டணை பற்றி நாம் அறிய வேண்டும். மக்களின் நன்மைக்காக கொண்டு வரப்பட்ட சட்டத்தை மக்களே பாதுகாக்க வேண்டுமென அஸீஸ் தெரிவித்தார்.