லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் கித்துள் பிரதேசத்தில் இலவச வைத்திய முகாம்

லயன்ஸ் கழகத்தின் மட்டக்களப்பு கிளையினரின் (306 C2) ஏறாபாட்டி; இலவச வைத்திய முகாம் செங்கலடி பதுளை நெடுஞ்சாலையில் கித்துள் ஸ்ரீ கிருஷ்ணா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

லயன்ஸ் கழகத்தின் 306 C2  தலைவர் லயன் மு.மகேந்திரராஜா தலைமையில் நடைபெற்ற இலவச வைத்திய முகாமில் பதுளை வீதியை அண்டிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இலவச சேவையினைப் பெற்றுக்கொண்டனர்.

கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக கண்ணாடிக்ள் வழங்கப்பட்டன, பற்சிகிற்சை, மூக்கு, தொண்டை பரிசோதனைகள்(ENT), நீரழிவு நோய்க்கான பரிசோதைனை செய்யப்பட்டு மருந்துகளும் வழங்கப்பட்டன.

கற்பிணித் தாய்மாருக்கான விசேட Scan பரிசோதனைகளை செங்கலடி சுகாதார வைத்தியதிகாரி ஆர்.ரவிச்சந்திரன் மோற்கொண்டார்.  


கடந்த கால யுத்த சூழ்நிலையின் கடும் பாதிப்புக்குள்ளன இப்பிரதேச மக்கள் தொடர்ந்து வெள்ளம் மற்றும் வரட்சிக்கு முகங்கொடுத்துள்ள காரணத்தினால் இப்பிரதேச மக்களின் சுகாதாரத் தேவையினைக் கருத்திற்கொண்டு இலவச வைத்திய முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதாக 306 C2 லயன் மு.மகேந்திரராஜா தெரிவித்தார்