ஆட்சியில் மாற்றம் ஏற்படுமானால் இந் நாடு மீண்டும் தீப்பற்றி எரியும் நிலை உருவாகும். சந்திரகாந்தன்

நாட்டின் நிறைவேற்று அதிகாரம் பற்றிய பிரச்சனை எமது பிரச்சனையல்ல அது தென்பகுதி அரசியல் தலைமைகளின் பிரச்சனையாகவே கருதவேன்டும். எமக்குத் தேவையானது தற்போதைக்கு அபிவிருத்தி,நிம்மதியான வாழ்கை இவை எமக்கு இவ் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுவருகின்றது. ஒருவேளை உதாரணமாக சொன்னால், தற்சமயம் இவ் ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியில் மாற்றம் ஏற்படுமானால் இந் நாடு தீப்பற்றி எரியும் நிலை உருவாகும்.

என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இன்று 30ம் திகதி மட்டக்களப்பு கல்லடி வாழ்வின் எழுச்சி சமுதாய வங்கிகியில் வாழ்வின் எழுச்சி நிவாரணம் பெறுபவர்களுக்கு செழிப்பான இல்லம் திட்டத்தின்கீழ்  வீடுகளைத் திருத்துவதற்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், 

எமது கல்வி வளர்ச்சிக்காக பாரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியது இவ் அரசாங்கம். முன்பெல்லாம் பாடசாலைகளில் கணனிகூடங்களே இல்லை. மாணவர்கள் கணணியை பார்பதற்குக்கூட நகர்ப்புறத்திற்குத்தான் வரவேன்டும். ஆனால் இவ் அரசாங்கம் பெரும்பாலான பாடசாலைகளுக்கு கணனி கூடங்களையே அமைத்துள்ளது,விஞ்ஞான ஆய்வு கூடங்களை அமைத்துள்ளது, உலகின் வளர்ச்சிக்கேற்ப தொழிநுட்ப பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படியான சூழலிலே எதிர்வரும் தேர்தலிலே ஆட்சி மாற்றம் நடக்கப்போகிறதாம் என்று சிலர் கூறுகின்றார்கள். கடந்த காலத்தில் மிகப்பெரிய கஸ்டங்களையும்,அழுத்தங்களையும்,கண்ணீரையும் தாங்கிக்கொண்டு இம் மண்ணிலே வாழ்ந்தோம். இவ்வாறான துன்பங்களுடன் வாழ்ந்த மக்களின் பிரதிநிதியான எங்களால் இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது.

காரணம் இங்கிருக்கும் யாருக்குமே ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேன்டிய தேவைப்பாடு கிடையவேகிடையாது. நீங்கள் எண்ணிப்பாருங்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலிங் சரத் பொன்சேகா சொன்னார் 180 நாட்களில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன் என்றார். அவரால் ஒழிக்க முடிந்ததா. இல்லை. இப்போது மைத்திரிபால சிறிசேனே 100 நாட்களில் ஒழிப்பேன் என்கிறார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இந்த நாட்டில் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன. என்னைப் பொறுத்தவரை இருந்தால்தான் நல்லம். 

இப்பொழுது தென்பகுதியில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அரசியலைப்பற்றி சற்று சிந்திக்கவேன்டும்.மைத்திரிபால சிறிசேனே உண்மையிலே அவர் பாவம். அவர் சொந்தப் புத்தியில் முடிவெடுக்கவில்லை.அவருடைய எண்ணக்கருவை தோற்றுவித்தவர் சந்திரிக்கா அம்மையார்.

இந்த நாட்டிவே சந்திரிக்கா அம்மையாரும் யுத்தம்செய்தார். அதிலும் பல உயிர்கள் அழிந்தன, பல விஷயங்கள் நடந்தன. ராஜபக்சே அவர்கள் யுத்தத்தை நடத்தி முடித்துவைத்துள்ளார். அவர் மக்களை நிம்மதியாக வாழவைக்கின்றார். 

இத் தேர்தலில் கடைசிவரைக்கும் மைத்திரிபால சிறிசேனே வினால் ஜனாதிபதியாக வரமுடியாது. அப்படி வந்தால், வந்தால் என்பதை உதாரணத்திற்காக சொல்கிறேன். அவர் வந்த கையோடு ரணிலுக்கு ஆட்சியைப் பிடிக்கும் ஆசை வந்திரும், அங்கால ஹெல உறுமய ஒருபக்கம் இழுக்கும், இஞ்சால ஜே.வி.பி ஒருபக்கம் இழுக்கும் அங்கொரு ஆர்ப்பாட்டம் நடக்கும் இங்கொரு அர்ப்பாட்டம் நடக்கும், பொலீசப் போடுவான் கல்லெறி நடக்கும் பிறகு ஆமியப் போடுவான், கடைகள் பத்தும் பிறகு நாடே தீப்பற்றி எரியும். இதெல்லாம் ஆறு ஏழு மாதத்தாலே நடக்கும்.

நீங்கள் நினைக்கலாம், நம்மடபக்கம் எங்க நடக்கப்போகுது எண்று. கொழும்பில நடந்தா நாம கொழும்புக்கு போகஏலுமா. ஏயார்போட்டுக்கு போகஏலுமா.  நாடு எங்கும் தீபரவும். 

இப்படி ஒரு சூழ்நிலை உருவாக வேன்டுமா. எனவே நாம அனைவரும் சிந்திக்கவேன்டும். இவ்வளவு காலமும் சொல்லமுடியாத கஸ்டங்ககை அனுபவித்தநாம் இப்போது ஓரளவு நின்மதியாக இருக்கின்றோம். நமது வாழ்க்கைத்தரம் உயர்ந்துவருகின்றது, நமது பிரதேசம் அபிவிருத்தி கண்டுவருகின்றது. இன்னும் நமக்கு பல தேவைப்பாடுகள் உள்ளன அதனை நாங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே ஊடாக பெற்றுத்தருவோம்.
எனக் கூறினார்

இந் நிகழ்வில் திவிநெகும திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் பி.குணரெத்தினம், மாவட்ட பிரதிப் பணிப்பாளர் F.X.மனோகிதராஜ், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மற்றும் திவிநெகும முகாமையாளர்கள் என பலரும் கலந்துகொணடனர்.