(அரசையூர் சிறிகரன்)
மட்டக்களப்பு அரசடித்தீவு அருள்மிகு ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய பரிவார மூர்த்தி ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய ஆலய புனராவர்த்தனஅஷடபந்தன மஹாகும்பாபிஷேக விஞ்ஞானம் எதிர்வரும் 19ம்திகதி இடம்பெறவுள்ளது
கிரியாரம்பம்- 17.11.2014 திங்கட்கிழமை
எண்ணெய்க்காப்பு - 18.11.2014 செவ்வாய்க்கிழமை
மஹாகும்பாபிஷேகம்-19.11.2014 புதன்கிழமை
ஒம் எனும் நாதம் உலகமெல்லாம் சேர்ந்தொலிக்க தேவர்கள்,நாயன்மார்கள்
போற்றும் சிவ பூமியாம் தெட்ஷண கைலாசமென பெரிதும் பெயர் விளங்கும் இலங்கை திருநாட்டின் கிழக்கே வங்கக்கடல் ஒசையுடன் மீன்பாடும் வாவிகள் சூழ்ந்தோடும் மட்டு நகரின் தென்மேற்கே மங்களம் பொங்கும் பதி அரசடித்தீவில் இன்பமொடு கோவில் கொண்டு வீற்றிருந்து தன்னை
நினைத்து தரிசிப்பவர்களுக்கு இன்னல் நீக்கி செல்வமோடு கல்வி இனிதருள்
புரியும் எங்கள் குல தெய்வம் ஸ்ரீ விக்னேஸ்வரப் பெருமானுக்கு பரிவார
மூர்த்தியாய் கோயில் அமரும் குருபரன் ஸ்ரீ வள்ளி , தெய்வானை சமேத
சிவசுப்பிரமணியப் பெருமானுக்கு நிகழும் சர்வ மங்களம் தரும் ஜய வருடம்
கார்த்திகைத் திருநாள் 3ம் நாள் (19.11.2014) புதன்கிழமை முற்பகல் 9.00
மணி முதல் 10.00 மணிவரையுள்ள குரு காலவோரையும் இதுவாதசி திதியும்,அத்தநட்சத்திரமும் மகர லக்கினமும் கெளரி சுகம் தரும் சுபநேரத்தில்
திருக்குடமுழுக்கு நடைபெற திருவருள் பாலித்துள்ளதால் பக்த அடியார்கள்
கிரியா காலங்களில் ஆசார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தந்து தொண்டுகள் புரிந்து ஸ்ரீ சிவசுப்பிரமணியப்பெருமானின் அருள் பெற்று சகல செல்வயோகம் மிக்க பெருவாழ்வு பெறுமாறு வேண்டுகின்றோம்.
கிரியாகால நிகழ்வுகள்
கார்த்திகை திங்கள் 1ம் நாள் 17.11.2014 திங்கட் கிழமை காலை 7.00
மணிமுதல் விநாயகர் வழிபாடு இபூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகி கணபதி ஹோமம் நடைபெற்று மாலை பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகி கிராமசாந்தி ,வாஸ்த்து சாந்தி, அதிவாசக் கிரியைகள், கடஸ்தாபனம்,யாகசாலைப்பிரவேசம்,யாகபூசை,தூபிஸ்தாபனம், தீபஸ்தானம், விம்பஸ்தாபனம்,அஷ்டபந்தம்
நடைபெறும்
கார்த்திகை திங்கள் 2ம் நாள் 18.11.2014 செவ்வாய்க்கிழமை காலை
7.00மணிமுதல் மலை 5.00 மணிவரை எண்ணெய் சாத்துதல் யாக பூசை மூலமந்திர ஹோமம் தீபாராதம் மலை - விம்பசுத்தி,விஷேட திரவிய ஹோமம் ஸ்பர்சாகுதி தீபாராதனை இடம் பெறும்
கார்த்திகை திங்கள் 3ம் நாள் 19.11.2014 புதன்கிழமை காலை 6.00 மணி
தொடக்கம் யாகபூசை இபூரணாகுதிஇதீபாராதனைஇசுபவேளையில் கும்பாபிஷேகம் விஷேடபூசை இடம் பெறும்
அனைவரும் வருக முருகன் அருள் பெறுகவென அழைக்கின்றனர் அரசடித்தீவு ஸ்ரீ சிவசுப்பிரமணியப்பெருமான் ஆலய நிருவாகத்தினர்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













