உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வூட்டும் பேரணி


(சிவம்)

உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வூட்டும் பேரணி மட்டக்களப்பு நகரில் இன்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணி வைத்தியசாலையிலிருந்து ஆரம்பமாகி ஆஸ்பத்திரி வீதி, சுங்க விதி, முனை வீதி மற்றும் கோவிந்தன் வீதி வழியாக வைத்தியசாலையை வந்தடைந்தது.

இதன்போது வீதிவழியில் பயணித்தவர்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வினியோகிகிகப்பட்டதோடு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்  விழிப்புணர்வு வீதி நாடகமும் இடம்பெற்றது.

வைத்தியசாலையின் பணிப்பாளர் ஐ.எல். இப்றாலெவ்வை தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் தாதியர்கள், ஊழியர்கள், கிழக்கு பல்கலைக்கழக தாதிய மாணவர்கள்,  வைத்தியசாலையின் தாதிய மாணவர்கள் விழிப்புணர்வூட்டும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திச் சென்றனர்.

இதே வேளை கிழக்கு பல்கலைக் கழக வைத்தியபீட மாணவர்கள் ஏற்பாடு செய்த பேரணி திருமலை வீதி, சென்றல் வீதி மற்றும் ஆஸ்பத்திரி வீதி வழியாக பிரதேச செயலகத்தை வந்தடைந்து விழிப்புணர்வு நாடகத்தின் பின்பு இருபேரணிகளும் இணைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.