வந்தாறுமூலை கணேஷா வித்தியாத்தில் புதிய மாடி கட்டடம் திறந்துவைப்பு

(சித்தாண்டி நித்தி) கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வந்தாறுமூலை கணேஷா வித்தியாலயத்திற்கான புதிய மாடி கட்டடம் திறந்துவைக்கும் நிகழ்வு கடந்த (7) வெள்ளிக்கிழமை பாடசாலையின் அதிபர் உதயகிரி தலைமையில் நடைபெற்றது. 

நடைபெற்ற பாடசாலை கட்டடம் திறந்துவைக்கும் நிகழ்வுக்கு கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் (அபிவிருத்தி) திருமதி சாமினி ரவிராஜ் மற்றும் ஏறாவூர்பற்று-2 கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.பொ.சிவகுரு, கல்குடா வலயக்கல்வி ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், அசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர். 

பாடசாலைக்கான புதிய மாடி கட்டடத்தை கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சாமினி ரவிராஜ் சுபவேளையில் நாடவெட்டி திறந்துவைப்பதையும் கட்டட திறப்பு விழாவுக்கு வருகைதந்தவர்களையும் பாடங்களில் காணலாம்.