இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரசாங்கமும் இராணுவமும் நேர்மையாக நடந்திருந்தால், அந்த யுத்தத்திலே உங்களது கைகள் கறைபட்டிருக்கவில்லை என்றால் ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைகளுக்கு தடை விதிப்பது ஏன்? சாட்சியமளிப்போரை கைது செய்வது ஏன்? என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் 8ம் திகதிய அமர்வின் போது இடம்பெற்ற 2015 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா இதன்போது மேலும் கூறுகையில்,
ஐக்கிய நாடுகளின் சர்வதேச மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை மீது மேற்கொள்ளப்பட்டு வரும் சர்வதேச விசாரணை நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் இடையூறாக இருப்பதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, சாட்சியமளிப்பதற்கு ஆர்வமுடையோருக்கு தடைவிதித்தல் மற்றும் சாட்சியாளர்கள் கைது செய்யப்படுதல் தொடர்பில் பேரவையின் உயர்ஸ்தானிகர் விமர்சனமும் விசனமும் வெளியிட்டிருக்கின்றார்.
இதனை செய்தியூடாக அறிந்து கொண்டேன். இலங்கை மீதான சர்வதேச விசாரணை விடயங்களில் இலங்கை அரசு இவ்வாறு செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் உயர்ஸ்தானிகர் கூறியிருக்கிறார்.
இறுதி யுத்தத்தின் போது அரசாங்கமும் இராணுவமும் நேர்மையாக நடந்திருந்தால், உங்களது கைகள் கறைபடியாதவை என்றால் சாட்சியாளர்களை ஏன் கைது செய்ய வேண்டும்? சாட்சியங்களை வழங்குவதற்கு ஏன் தடை விதிக்க வேண்டும்? ஏன் இடையூறுகளை விளைவிக்க வேண்டும்?

இலங்கை மீது சர்வதேசம் இன்று விமர்சனங்களை முன்வைத்து வருகின்றது.
இவ்வாறு உலகின் பல நாடுகளும் விமர்சனங்களை முன்வைத்து வரும் போது
அதன்மூலம் இலங்கைக்கு அவப்பெயரே ஏற்படுத்துகின்றது.
எனவே இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் சர்வதேச மனித உரிமைகள் பேரவையினது சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.