மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளரும் ஜனாதிபதியின் மட்டக்களப்பு இணைப்பாளருமான அருண் தம்பிமுத்துவின் அலுவலகம் மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் இன்று திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம் ஏறாவூர் நகரசபையின் முதல்வர் அலிசாகிர் மௌலானா உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் பிரதேச அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இவ்நிகழ்வில் மதத்தலைவர்கள் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினர்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசியல் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் வகையிலும் இந்த அலுவலகங்கள் திறக்கப்பட்டுவருகின்றன.












