வயல் பகுதியில் கஞ்சா தோட்டங்கள் செய்துவந்த இருவர் கைது

எஸ்.சதீஸ் - வவுணதீவு பிரதேசத்தின் வயல் பகுதியில் கஞ்சா தோட்டங்கள் செய்துவந்த இருவரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது 66 கஞ்சா செடிகள் மீட்கப்பட்டதாகவும், கன்னங்குடாவில் உள்ள வயல் வெளியில் இருந்தே இந்த கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.



இதன்போது கன்னங்குடாவை சேர்ந்த சின்னத்தம்பி வைரமுத்து என்பவரின் தோட்டத்தில் இருந்து 47 கஞ்சா செடிகளும் கந்தையா சித்திரவேல் என்பவரின் தோட்டத்தில் இருந்து 19 செடிகளும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, இருவரையும் எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.