கிழக்கு பிராந்திய கல்வி மற்றும் பொருளாதார
அபிவிருத்தி நிறுவனத்தின்(EREEDO) மட்டக்களப்பு, பிள்ளையாரடியில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிறுவனத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா
இந்திரகுமார் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மட்டக்களப்பு கிறிஸ்தவ மத்தியஸ்தான சபையின்
போதகர் எஸ்.ஏ.திவ்யகுமார், மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)
ஏ.சுதர்சன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளை
விரிவாக்கல் உத்தியோகத்தர் வீ,பிரேம்குமார், உட்பட்ட
அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது இங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணம்
நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டதுடன், பயிற்சியினை நிறைவுசெய்த மாணவர்களுக்கும்
அதிதிளினால் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.












