(நித்தி) சித்தண்டி சிகண்டி பவுண்டேசன் மற்றும் வானவில் இளைஞர் கழகமும் இணைந்து நடாத்திய சாதனையாளர் பாராட்டு விழாவானது சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய முன்றலில் நடைபெற்றது.
நடைபெற்ற சாதனையாளர்கள் பாராட்டு விழாவிற்கு மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திரு.கந்தலிங்கம் சத்தியநாதன், கிழக்கு மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு பணிப்பாளர் திரு.சி.சாமித்தம்பி கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் (அபிவிருத்தி) திருமதி.சா.ரவிராஜ், பாடசாலைகளின் அதிபர்கள், சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய நிருவாக சபையினர், கிராம அமைப்புக்களின் தலைவர்கள், சிகண்டி பவுண்டேசன் மற்றும் வானவில் விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வில் அதிதிகள் அழைத்துவரப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டதும் ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலயத்தில் ஆலய வழிபாடு நடைபெற்றதுடன் ஆலய பிரதம குரு அவர்களினால் ஆசியுரையும் வழங்கப்பட்டது.
2014ம் ஆண்டு சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் சித்தாண்டி பிரதேசத்திலுள்ள பாடசாலைகளிலிருந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், தேசிய ரீதியில் கணித நாடகப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள், விளையாட்டுப் போட்டியில் தேசிய மட்டம்வரை சென்று வெற்றியீட்டிய மாணவர்கள், இவ்வருடம் நடைபெற்ற சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி ஆலயத்தின் உற்சவ விழாக்களில் தொண்டர் படை அமைப்பில் கடமையாற்றிய மாணவர்கள் என பல்வேறு சாதனையாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
சித்தாண்டியில் வருடாந்தம் சாதனையாளர்களை பாராட்டும் விழா நடைபெற்று வருகின்ற நிலையில் 2014ம் ஆண்டுக்கான சாதனையாளர்களாக இம்முறை பல்வேறு மட்டங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். அந்த வகையில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து பல்வேறு நிகழ்வுகளில் தேசிய மட்டம் வரை சென்று வெற்றியீட்டிய அதிகமான மாணவர்கள் இம்முறை கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நடைபெற்ற சாதனையாளர்களை பாராட்டும் நிகழ்வில் சிறு கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஸ்மாட் தெளிகருவியை கண்டுபிடித்து தேசிய மட்டம் வரைசென்று முதலாமிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர் கௌரவிக்கப்பட்டனர்.
2014ம் ஆண்டுக்கான சாதனையாளர்களாக கௌவிக்கப்பட்ட மாணவர்களைப் பாராட்டி நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்களும் நிகழ்வுக்கு வருகைதந்த அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டன.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)










