விஞ்ஞான உதவிக்கல்விப்பணிப்பாளர் 16 வருட சேவையின் பின் ஓய்வு


விஞ்ஞான உதவிகல்விப் பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற சாமித்தம்பி நவரெட்ணம் அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு கடந்த 29 சனிக்கிழமை  கல்குடா நாமகள் வித்தியாலயத்தில்  கல்குடா கல்வி வலய விஞ்ஞான ஆசிரியர்களால் நடத்தப்பட்டது. 

கல்குடா கல்வி வலயத்தில் விஞ்ஞான பாடத்துறை முன்னேற்றத்திற்காக இடர் காலத்திலும் அயராது சேவையாற்றிய இவரின் மகத்தான சேவை ஆசிரியர்கள் பாராட்டினர்.

ஓய்வு பெற்ற விஞ்ஞான உதவிகல்விப்பணிப்பாளர் தனதுரையில் ' இதுவரை தான் சிறந்த முறையில் ஆசிரியர்களை மனம்கோணாது நடத்தியதாகவும் தனது இறுதி இலக்கான சிறந்த சேவை மனப்பாங்குள்ள ஆரோக்கியமான விஞ்ஞான ஆசிரிய சமூகம் ஒன்று தற்போது கல்குடா கல்வி வலயத்தல் உருவாகியுள்ளமை இதற்கு எடுத்துகாட்டாகும்' என குறிப்பிட்டார்.

 இந்நிகழ்வில் விஞ்ஞான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் மதிப்பிற்குரிய எஸ்.தர்மபாலன் உட்பட, வித்தியாலய பிரதியதிபர்,மற்றும் சிரேஸ்ட விஞ்ஞான ஆசிரியர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.