மனிதாபிமான உதவியளிப்பு திட்டத்தின்கீழ் 23 நிரந்தர வீடுகள் வழங்கியது சுவீடன் கூ.நிறுவனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள களுவன்கேணி கிராமத்தில் சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட 23 நிரந்தர வீடுகள்  இன்று 11ம் திகதி பயனாளிகளிடம்  கையளிக்கப்பட்டது.


சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் நிதியுதவியுடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களையும் மக்களையும் மீள் கட்டியெழுப்பும் மனிதாபிமான உதவியளிப்பு வேலைத்திட்டத்தின்கீழ் களுவங்கேணி கிராமத்தில், ஒவ்வொரு வீடும் தலா  7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு உரிய பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உரையாற்றுகையில்,

இந்த களுவங்கேணி கிராமத்தை பெறுத்தவரை வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் அதிகமாக உள்ளனர். இவ் 23 வீட்டுத் திட்டத்தை இக் கிராமத்திற்கு வழங்குவதற்கான மிகவும் கஸ்டப்பட்டு மக்களை தெரிவுசெய்தோம். இன்னும் அதிகமான குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளின் தேவைப்பாடு உள்ளது.

சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் உதவியால் விடுகள் வழங்கப்பட்ட 23 குடும்பங்களும் இனிவரும் காலங்களில் தாம் வாழ்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளலாம். இவ் வீடுகள் வழங்கப்பட்டதனால் இக் குடும்பங்களுக்கு பொரியதொரு தொகைப் பணம் சேமிக்கப்படுகின்றது. இக் குடும்பங்கள் தமது வாழ்கைத்தரத்தை உயர்த்துவதில் இனிவரும் காலங்களில் கவனம் செலுத்த வேன்டும். அவ்வாறு வாழ்கைத்தரம் உயர்ந்தால்தான் இவ் வீடுகள் வழங்கப்பட்டதற்கான  பலாபலன் கிடைக்கும்.

அபிவிருத்தி என்பது வீடுகள் வழங்குவது மாத்திரமல்ல, அக் குடும்பங்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய வேன்டும், பிள்ளைகள் சிறந்த முறையில் கல்வி கற்று சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கவேன்டும்.அவ்வாறு வரும்போது இப் பிரதேசம் தானாகவே அபிவிருத்தியடையும்.

இக் கிராமத்தின் தாய்தந்தையர் தங்கள் பிள்ளைகளை கல்விகற்ற இடமளிக்கவேன்டும். பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்துக்கொள்ளக் கூடாது. இன்று உங்களுக்கு வழங்கப்பட்ட இவ் வீடுகள் ஒரு காலத்தில் அழிந்துவிடலாம். ஆனால் கல்வி நாம் இரக்கும்வரை அழியாது.

இப் பிரதேசத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத காரணத்தினால் உறவினர்கள் சேர்ந்து ஒரே வீட்டில் தங்கும் நிலைகள் உண்டு.  இதன் விளைவாக உடல் உள ரீதியிலான பல துஸ்பிரயோகங்களும் நடக்கின்றது. இவ்வாறான வீடுகள் வழங்கப்பட்டால் எதிர் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.

இவ் வீடுகள் மிக பெறுமதியானது, இலவசமாக வழங்கப்பட்டதுதானே என்று பராமரிக்காமல் இருந்துவிடக் கூடாது. இவ் வீடுகள் இன்றிலிருந்து உங்களுக்குச் சொந்தமானது. இதனை பாதுகாத்து பராமரித்து அனைவரும் சிறப்புடன் வாழ்கை நடத்தவேன்டும்.
என தனது உரையில் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சுவீடன் கூட்டுறவு நிலையத்தின்  இலங்கைக்கான பணிப்பாளர் சுபாஸி திஸ்ஸநாயக்க, அந்த நிறுவனத்தின் ஆசிய நாடுகளுக்கான பிராந்திய பணிப்பாளர் மக்னஸ் பேர்ஸன் (Regional Director for Asia – Magnus Person ), சுவீடன் கூட்டுறவு நிலையத்தின்  கிழக்கு மாகாண இணைப்பாளர் ரீ.மயூரன், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.