கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 3வது சர்வதேச ஆராய்சியாளர்கள் மகாநாடு இறுதி நாள் நிகழ்வுகள்

(சித்தாண்டி நித்தி) கிழக்கு பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆராய்சியாளர்கள் மகாநாடு இறுதி நாள் நிகழ்வுகள் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தலைமையில் இன்று (5) வெள்ளிக்கிழமை முகாமைத்துவப் பீட விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றது.

மகாநாடு ஆரம்ப நிகழ்வுகள் 2014ம் ஆண்டுக்குரிய  செயற்பாட்டு குழுவினர்களால் மிகவும் கோலாகலமாக நேற்று (4) வியாழக்கிழமை நல்லையா மண்டபத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

2014ம் ஆண்டிக்கான ஆராட்சி மகாநாட்டிக்காக 'புதுமையாக்கம் ஊடாக நிலைத்திருக்கும் அபிவிருத்தி' எனும் கருப்பொருளை மையமாக தெரிவு செய்யப்பட்டு நடைபெற்றமை பொதுவான அம்சமாகும். 

விவசாயம் மற்றும் உணவு ஊட்டச்சத்து, பிரயோக விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பம், வியாபாரம் மற்றும் தொழிற்துறை, கலாநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல், மருத்துவம், மனித நலன் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஆய்வாளர்களிடம் இருந்து ஆய்வுக்கட்டுரைகள் கோரப்பட்டு பெறப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை மதிப்பீட்டுக் குழுவினரால் அளிக்கை செய்வதற்கு தகுதியுடையவைகள் என சிபார்சு செய்யப்பட்ட 75 ஆய்வுக்கட்டுரைகளுக்குமான அரங்கப்படுத்துவதற்குரிய இறுதி நாட்களாக இந் மகாநாடு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ஆராய்ச்சியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா கருத்து தெரிவிக்கையில்;,

2014ம் ஆண்டு சர்வதேச ஆராய்சி மகாநாடு நிகழ்வை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் வழிநடாத்தி செய்து முடித்த செயற்;குழு, மகாநாட்டுக்கு வருகைதந்த அதிதிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் நன்றிகள். இம்மகாநாடு தேசிய, சர்வதேசிய மட்டத்திலுள்ள அறிவியலாளர்கள், புலமையாளர்கள், இளம் ஆராட்சியாளர்கள் தமது ஆராட்சி முடிவுகளை அரங்கப்படுத்துவதற்கு களத்தினை அமைத்துக் கொடுத்திருப்பதுடன், இவ்வாறான புலமைசார் ஆராட்சியின் மூலம் கிழக்கு பல்கலைக்கழகம் தொடர்ந்தும் தேசிய அபிவிருத்திக்கும், பிராந்தியத்தின் அபிவிருத்திக்கும் தனது பங்களிப்பை நீடித்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார். 

இறுதி நாள் நிகழ்வில் ஆராய்ச்சியாளர்களின் அரங்க வாதம், மதிப்பீட்டுக்குழு, ஆராய்ச்சி மகாநாடு நிகழ்வை கண்டுகழிப்பதற்கு வருகைதந்த ஆர்வலர்கள் படங்களில் காணப்படுவதையும் மற்றும் மகாநாடு நிகழ்வுக்கு வருகைதந்த அதிதிகள் மற்றும் 2014ம் ஆண்டு சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் மகாநாடு நிகழ்வை நடாத்திய செயற்குழு அங்கத்தவர்கள் அனைவருக்கும் நினைவுச் சின்னங்களை உபவேந்தர் வழங்கி வைப்பதையும், 2014ம் ஆண்டு சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் மகாநாடு நிகழ்வின் நினைவுச் சின்னத்தை மகாநாடு செயற்குழு தவிசாளர் ரி.வபான் கிழக்கு பல்கலைகழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவிற்க்கு வழங்கி வைப்பதையும் படங்களில் காணலாம்.