நாட்டில் பெய்து வரும் மழையினால் அம்பாரை மாவட்டத்தில் 73 ஆயிரம் இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாரைமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்ததுஅம்பாரை மாவட்டத்தில் உள்ள 20 பிரதேசசெயலகப்பிரிவுகளிலும் 3500 குடும்பங்களைச்சேர்ந்த 14000 ஆயிரம் பேர் 19 நலன்புரிநிலையங்களில் தங்கவைக்கப்ட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்
குறிப்பாக இம்மாவட்டத்தில் கல்முனை நாவிதன்வெளி ஆலயடிவேம்பு அட்டாளைச்சேனை நிந்தவுர் சாய்ந்தமருது திருக்கோவில் பொத்துவில் தமண இறக்காமம் உள்ளிட்ட கரையோரப் பகுதிக் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதுடன் இப்பகுதிகளில் அதிகமான இட்ம்பெயர்வும் இடம்பெற்று இருக்கிறது அத்தோடு மீனவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதுடன் அவர்களின் மீன்பிடி உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளது
















