(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு சுமைதாங்கிபாலப் பகுதியில் வீதியின் மேலாக வெள்ளம் பரவிக்கொண்டிருக்கையில் இன்று காலை அப் பதாதையினால் மக்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். தன்போது வயோதிபர் ஒருவர் தண்ணீரால் ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு, அவ் வீதியால் வந்த ஓர் மனிதனேயமுள்ள நபரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இன்று (29)முற்பகல் 10.00 மணியளவில் சுமைதாங்கி பாலத்தடியில் வீதியின் துவிச்சக்கர வண்டியுடன் ஓர் வயோதிபர் தண்ணீரால் ஆற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். அந்தவேளையில் அவ்வழியாக வந்த மட்டக்களப்பு - கரவெட்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி சுரேஸ்குமார் (ராசா) என்பவர் துணிச்சலுடன் செயற்பட்டு தனது பெறுமதி மிக்க கையடக்கத் தொலைபேசி போன்ற ஆவணங்களை அவ்விடத்தில் நின்ற ஓர் நபரிடம் வைத்திருக்கும்படி கொடுத்துவிட்டு ஆற்றுக்குள் பாய்ந்து மிகவும் திறமையுடன் தனது உயிரையும் பொருட்படுத்தாது கடுமையான போராட்டத்திற்குமத்தியில் அவ் வயோதிபரை காப்பாற்றினார்.
இச் சம்பவத்தினை அவ்விடத்தில் நின்ற அதிகமான மக்கள் பார்துக்கொண்டிருந்தனர்.
இம் மனிதனேயம் கொண்ட நபருக்கு இறுதியாக கிடைத்த வெகுமதி தனது கையடக்கத் தொலைபேசியை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கொடுத்தவர் அந்த பெறுமதி மிக்க கையடக்க தொலைபேசியுடன் அவ்விடத்திலிருந்து மாயமககியதுதான்.
இவர், இறுதியில் கையடக்கத் தொலைபேசியையும் இழந்துவிட்டவரானார்.
இப்படி மனிதனேயம் கொண்ட மனிதர்களுள் ஒருசில மனிதனேயமற்ற மாயைமனிதர்களும் உள்ளனர்.
மேற்படி சம்பவத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாது மிக ஆழமான ஆற்றுக்குள் பாய்ந்து ஓர் மனித உயிரை காப்பாற்றிய சின்னத்தம்பி சுரேஸ்குமார் (ராசா) அவர்களை எமது இணையத்தளம் பாராட்டுகின்றது.