ஓய்வுபெற்றுச் செல்லும் உதவிப்பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு


( சிவம் ) மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தில் உயர் பதவி வகித்து ஓய்வுபெற்றுச் செல்லும் உதவிப்பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (13) திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கடற்றொழில் திணைக்களத்தில் கடற்றொழில் பரிசோதகராக இணைந்து பின்பு கல்முனை மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் 5 வருடங்கள்  பின்பு மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தில் 15 வருடங்களாக உதவிப் பணிப்பாளராக சேவைபுரிந்துள்ளார்.



சிரேஷ்ட ஊடகவியலாளரும் கவிஞருமான ரி.எல். ஜவ்பர்கான் உதவிப் பணிப்பாளரின் சேவைக்;காலத்தில் அவர் கடைப்பிடித்த ஒழுக்க விழுமியங்கள் மற்றும் தமிழ் முஸ்லிம் மக்களின் உறவிற்கு அவர் ஆற்றிய சேவைகளைப் பற்றிக் கூறினார்.

மாவட்ட கடற்றொழில் சம்மேளனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பொன்னாடை, பாராட்டுப்பத்திரங்கள், நினைவுச்சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன், மாவட்ட கடற்றொழில் சம்மேளனங்களின் தலைவர் ஏ.சி.எம். முனைவர், சேவா லங்கா நிறுவகத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் கே. நாகராஜா, ஓய்வுபெற்ற றோட்டறிக் கழகத் தலைவர் கணக்காளர் எஸ். டேவிட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.