மைத்திரி ஆட்சியில் நெல்லின் நிர்ணயவிலை 50 ரூபா செங்கலடியில் ரணில் விக்கிரமசிங்க

(பேரின்பராஜா சபேஷ்) எனது வாழ்வில் முதல்தடவையாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்துகொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொதுச் செயலாளரான மைத்திரிக்கு  வாக்களிக்கச் சொல்கிறேன் என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து செங்கலடியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்

கணபதிப்பிள்ளை மோகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக  ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்களான அ.சசிதரன், ஏ.ரி.மாசிலாமணி, ஏ.சி.கியாஸ்டீன்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அவர் தொடரந்து உரையாற்றுகையில்

எமது நாட்டிலுளள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் என்ற வேறுபாடுகளின்றி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப ஒன்றுசேர்ந்துள்னோம். மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியதக்கி இந்த நாட்டியே அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீவை உருவாக்கி மாகாண சபை முறைமைய அமுல்படுதவோம்.

நெல்லின் நிர்ணயவிலையை 50 ரூபாவாக வைத்திருப்பதேடு ஐந்து வருடத்தில் கைத்தொழில் பேட்டைகள் அமைத்து 10 இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திகொடுக்கப்படும்.

மைத்திரிபால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படுவதுடன் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் பெற்றுக்கொடுக்கப்படும். அதேபோன்ற தனியார்துறை ஊழியயர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க நடவடிக்கையெடுப்பேன். அதேபேதன்று சமுர்த்திக் கொடுப்பனவை இருநூறு மடங்குகளாக உயர்த்த நடவடிககையெடுப்பேன்.

வெளிநாட்டவர்களை இலங்கையில் மீன் பிடிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். ஐரோப்பிய நாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்வதற்கு தற்போதுள்ள தடையை நீக்கி மீன்களை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்குவேன்.