சம்மாந்துறை மசூறா சுஹுறுத்தீனுக்கு பிரதீபா பிரபா விருது!

       
   ( ஏ.ஆர்.மதீஹா றபீக் )
சம்மாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி.மசூறா சுஹுறுத்தீன் (மசூறா ஏ.மஜீட் ) விசேட திறனுடைய ஆசிரியர்களைப் பாராட்டல் எனும் அம்சத்தின் கீழ் 2014ம் ஆண்டுக்கான பிரதீபா பிரபா விருதினைப் பெற்றுள்ளார்.
கல்முனை வலயத்திலுள்ள காரைதீவுக் கோட்டத்தின் மாவடிப்பள்ளி அல்-அஸ்றப் மகா வித்தியாலய ஆசிரியையான இவர் கிழக்கு மாகாணத்திலேயே விசேட விருதிற்காக தமிழ்மொழி மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு ஆசிரியையாவார்.
திருமதி.மசூறா சுஹுறுத்தீன் அண்மையில் மகரகம தேசிய கல்வி நிறுவக வளாகத்தில் பிரதமரிடமிருந்து பிரதீபா பிரபா விருதினைப் பெற்றுக் கொண்டார்.

அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் சாமஸ்ரீ, கலாஜோதி, மலையக கலை இலக்கிய சங்கத்தின் இரத்தினதீபம், ஆர்.கே.மீடியாவின் இலக்கிய நிலா, நாடகத் தயாரிப்பாளருக்கான தேசிய விருது, சுற்றாடல் அமைச்சின் ஆசிரியர்களுக்கான தேசிய சுற்றாடல் விருது என இதுவரை பத்தாவது விருதாக பிரதீபா பிரபா விருதினைப் பெற்றுள்ளார்.
இலங்கையின் புகழ் பூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான மசூறா  கவிதை, விடுகதை, நாடகம், பாடல், ஓவியம் எனப் பன்முக ஆளுமை கொண்டவராவார். இவற்றில் தேசிய மட்ட வெற்றிகள் பல கண்டுள்ளார்.
தற்போது கல்முனைக் கல்வி வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளராகவும், கல்முனை மாவட்ட சென்ஜோன்ஸ் அன்பிலன்ஸ் (முதலுதவி) உதவி ஆணையாளராகவும், அகில இலங்கை சமாதான நீதவானாகவும் பணி புரிகின்றார்.
இவரது சகல முயற்சிகளும் சிறப்பாய் அமைவதற்கு, இவரது கணவரான மருதமுனையைச் சேர்ந்த ஏ.எம்.சுஹுறுத்தீன் பக்க பலமாகத் திகழ்கின்றார் என்றால் அது மிகையாகாது.
சோதரி மசூறாவின் அனைத்து முயற்சிகளும் வெற்றியளிக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்,
செயலாளர்,
நிந்தவூர் எழுத்தாளர் சங்கம்.