நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலய க.பொ.த சாதாரண தர மாணவர் தினம்

கல்முனை நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலயத்தின் கல்வி பொது தராதரப் பத்திர சாதாரண தர மாணவர் தினம் கடந்த வெள்ளிகிழமை பாடசாலை அதிபர் சபாரெட்ணம் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

அங்கு உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர், எனது பிரதேசத்து பாடசாலை ஒன்றின் நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு பெரு மகிழ்ச்சியும், பெருமையும் அடைகின்றேன். அத்துடன் மாணவர்கள் கல்வியில் சிறந்த பெறுபேறுகளையும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், எமது பிரதேசத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் நட்பிட்டுமுனை பிரதேசத்தை சேர்ந்த புத்திஜீவிகளும், பெற்றோரும் கலந்து கொண்டனர்