அடைமழை:வெள்ளம் காரணமாக வீடுகள் சேதம்

(சித்தாண்டி நித்தி) வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வினாயகபுரத்தில் அடை மழை காரணமாக சேதமடைந்த கணபதி பாக்கியம் என்பவரது வீட்டினை நேற்று வியாழக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தனது தனிப்பட்ட உதவி தொகையினை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கி வைப்பதனையும் அருகில் ஏனைய உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணப்பிள்ளை.மற்றும் மா.நடராஜா ஆகியோர்கள் காணப்படுவதனையும் படங்களில் காணலம்.

வெள்ளம் மற்றும் அடைமழை காரணமாக ஓலைக்குடிசைகள், தகரக்கொட்டில்கள், மதில்கள், வேலிகள், கல்வீடுகள் என்பன சித்தாண்டியில் பல பகுதிகளில் அழிவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.