சித்தாண்டியில் வெள்ள நீர் அபாயம்! குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளது

(நித்தி) சித்தாண்டி தாழ் நிலப் பிரதேசத்திலுள்ள வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ள நீரினால் மூழ்கியுள்ளது.

சித்தாண்டி 4ம் குறிச்சி உதயன்மூலை, பழைய சந்தை வீதி, வேலாயுதர் வீதியிலுள்ள சுமார்  236 வீடுகளும் சித்தாண்டி 3ம் குறிச்சியிலுள்ள சுமார் 80 வீடுகளும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிகின்றனர்.

தொடர்ச்சியான மழையினால் இப்பிரதேசத்து மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்ட நிலையில் விவசாய நடவடிக்கை மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

வீதிகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால்; போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பெரும் சிரமாக உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பிரதேசத்தின் தாழ் நில விவசாய பயர் நிலங்கள் முற்றாக வெள்ள நீரில் மூழ்கியள்ளது. 

சித்தாண்டி பிரதேசம் கடந்த காலங்களிலிருந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுவரும் பிரதேசம், இப்பிரதேசத்தில் மழை நீர் பாய்ந்து செய்வதற்குக்கூட இதுவரைக்கும் வடிகாண்களை உரிய இடங்களில் புணரமைக்கப்படாததன் காரணமாக மழை நீர் தேங்கி நிற்பதால் குடிசைகொட்டில்களில் வசிக்கும் மக்கள் விரைவாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் இடம்பெயர்ந்து உறவினர் மற்றும் பொதுக்கட்டங்களில் தங்கவேண்டி நிலையும் காணப்படுகின்றது. 

மற்றும் வந்தாறுமூலையில் தாழ் நிலப்பிரதேசங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் சிரமத்துக்குளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர். 

வெள்ள நீர் அபாயம் காரணமாக மக்களை பொதுக்கட்டங்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நாட்களாக பெய்துவரும் மழையினால் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.