(படுவான் பாலகன்) தொடர்ச்சியான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் பல வீதிகளுக்கான போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.
அதிகமாக மக்கள் பயணம் செய்கின்ற புதிதாக அமைக்கப்பட்ட மண்முனை பாலத்தின் இரு பக்க வீதிகளில் வெள்ளம் நிறைந்து காணப்படுவதனால் அதன் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றும் இன்றுமாக(28) மண்முனைப் பாலத்தின் கிழக்குப் பக்கத்திலிருந்து மகிழடித்தீவு சந்திவரை படகுச் சேவை மற்றும் உழவு இயந்திரச்சேவை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இச்சேவையினை மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும், வேள்ட்விஸன் நிறுவனமும், கடற்படையினரும் இணைந்து வழங்குகின்றனர்.
நாளையும் வெள்ளநிலைமை தொடருமாக இருந்தால் இச்சேவை தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் கூறப்படுகின்றது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












