இறை நம்பிக்கையுள்ளவர்கள் தங்களது வாழ்க்கையில் சந்தோசமாக வாழ்வார்கள் வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன்.

(ஆர்.தில்லை)
இறை நம்பிக்கையுள்ளவர்கள் தங்களது வாழ்க்கையில் ஏற்படும் துன்பதுயரங்களில் இருந்து மீண்டு சந்தோசமாக வாழ்வார்கள் இவ்வாறு பலர் வரலாற்று ரீதியாக வாழ்ந்து  காட்டியிருக்கின்றார்கள் என கல்முனை வடக்கு
ஆதாரவைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கிருஸ்த்தவ அமைப்பினரால் ஒழங்கு செய்யப்பட்ட ஒளிவிழா நிகழ்வானது நேற்றைக்கு முன்தினம் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் வைத்திய அத்தியட்சகர் முரளீஸ்வரன் தலமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் முதல்வர் எம்.ஸ் ரீபன் மத்தியு மற்றும் கிருஸ்தவமதப்பெரியார் வைத்திய சாலையின் தாதியர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்.

நான் உட்பட இங்கு அமர்ந்திருக்கும் அனைவரும் இன்று நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ்கின்றோம் என்றால் நாம் ஒவ்வொருவரும் செய்த நல்ல செய்பாடுகளும், இறைநம்பிக்கையுமே அன்றி வேறொன்றுமில்லை என்றே கூறலாம்.

குறிப்பாக இறைநமபிக்கை இல்லாதவர்களிடத்தே நல்ல செயற்பாடுகள் குறைவானதாகவே இருக்கும் அத்தோடு அவர்களது வாழ்க்கையில் பல போராட்டங்கள் ஏற்படும் அந்த போராட்டங்களில் அவர்கள் இலகுவாக வெற்றியடைவது கடினமானதாகவே இருக்கும்.

நாங்கள் எங்களது ஆரம்ப கல்வியினை எந்த இடத்தில் எவ்வாரான சூழலில் வழர்கின்றோமோ அந்த சூழலில் இருந்து பல விடயங்களை கற்றுக்கொண்டு வாழப்பழகுகின்றோம் அதற்கிணங்கவே புனித மிக்கல் கல்லூரியில் கல்வி கற்றவன் என்ற ரீதியில் நான் ஒரு கிருஸ்த்தவ சூழலுக்குள்ளே வாழ்ந்தவன் என்பதனடிப்படையில் அருட்சகோதரர்களது வழிகாட்டல்கள் மூலம் பல நல்ல விடயங்களைக்கற்று இவ்வாரான இடத்த்pற்கு வருவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது.

இந்த வைத்தியசாலையில் எவ்வாரான கலாசார விழாக்கள் நடைபெற்றாலும் அது மிகவும் சிறப்பானதாக அமையவேண்டும் என்பதற்கு அமைவாக இந்த விழாவினை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள் இதற்காக உழைத்த அனைவரையும் பாராட்டுகின்றேன் எனவும் கூறினார்.