தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது என்ற முடி­வினை மிக விரைவில் த.தே.கூ. அறி­விக்கும்! மட்டக்களப்பில் மாவை


(பேரின்பராஜா சபேஷ்)
எமது மக்­களின் நலன் சார்ந்த விட­யங்­களை தற்­போது ஆராய்ந்து வரு­கிறோம். அதன் அடிப்­ப­டையில் ஜனா­தி­பதி தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது என்ற முடி­வினை மிக விரைவில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு அறி­விக்கும் என இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்­துள்ளார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்­க­ளு­டைய வாக்­கு­களை முற்­று­மு­ழு­தாகப் பதி­வு­செய்ய வேண்டும் அதற்­கான வேலை­களை தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் உட­ன­டி­யாக ஆரம்­பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார் 
 
ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பாக வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்­களின் அபிப்­பி­ரா­யங்­களை அறிந்­து­கொள்ளும் கலந்­து­ரை­யாடல் கல்­லடி துளசி மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. கூட்­டத்தின் தீர்­மா­னங்கள் தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யிலே இவ்­வாறு குறிப்­பிட்டார்.
தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பொன் செல்­வ­ராசா தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன், பா.அரி­ய­நேத்­திரன், கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான கி.துரை­ரா­ஜ­சிங்கம், இரா.துரை­ரெட்ணம், பிர­சன்னா இந்­தி­ர­குமார், கோ.கரு­ணா­கரம், ஞா.கிருஸ்­ண­பிள்ளை, மா.நட­ராஜா கட்­சியின் உறுப்­பி­னர்கள் ஆத­ர­வா­ளர்கள் என பலரும் கலந்­து­கொண்­டனர்.
 
அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
 
ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பாக தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள் ஆத­ர­வா­ளர்­களின் கருத்­துக்­களை அறிந்து கொள்ளும் நோக்கில் இந்த கூட்­டத்தை ஏற்­பாடு செய்­தி­ருந்தோம்.
ஏற்­க­னவே வடக்கில் இவ்­வா­றான கூட்­டங்­களை நடத்தி கருத்­துக்­களைப் பெற்­றி­ருந்தோம். திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் கருத்­துக்­களை அறிந்­து­கொண்­டுள்ளோம்.
 
எமது பிர­தி­நி­திகள் மத்­தியில் பல்­வேறு கருத்­துக்கள் பரி­மா­றாப்­பட்­டுள்­ளன. எமது கட்சி மீது மக்கள் வைத்­துள்ள நம்­பிக்­கையில் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் கிடை­கப்­பெற்ற கருத்­துக்களை ஒன்­று­தி­ரட்டி தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தலை­மை­யுடன் நாங்கள் தொடர்­சி­யாக விவா­தித்துக் கொண்­டி­ருக்­கிறோம். 
 
தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னு­டைய தலைமை இந்த கருத்­துக்­களைப் பரி­சீ­லித்து ஒரு உறு­தி­யான முடிவு எடுக்கும். அதன் பின்னர் எமது நிலைப்­பாட்­டினை அறி­விக்க வேண்டும் என நாங்கள் எண்­ணிக்­கொண்­டி­ருக்­கிறோம். 
 
எமது மக்கள் கடந்த காலங்­களில் எவ்­வித நலன்­க­ளையும் நன்­மை­க­ளையும் பெறா­த­வர்கள் அதன் அடிப்­ப­டையில் மக்கள் மீது நம்­பிக்கை செலுத்தி கலந்­து­ரை­யா­டி­யுள்­ளளோம். மிக­வி­ரைவில் யாருக்கு வாக்­க­ளிக்க வேண்டும் தேர்­தலில் எவ்­வாறு நடந்­து­கொள்ள வேண்டும் என நாங்கள் அறி­விப்­பபோம்.
 
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்­க­ளு­டைய வாக்­கு­களை முற்­று­மு­ழு­தாகப் பதி­வு­செய்ய வேண்டும் அதற்­கான வேலை­களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.
 
ஜனநாயக ரீதியான ஒரு சந்தர்ப்பத்தில் நாங்கள் எங்கள் வாக்குகள் முழுவதையும் பதிவு செய்வதற்கான முயற்சிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்வதற்கு ஆயுத்தம் செய்கிறார்கள் என்றார்.