மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழையின் காரணமாக வாகரை பிரதேசத்திலுள்ள குளங்களின் நீர் மட்டம் உயர்வடைந்ததன் காணமாக குளங்கள் உடைப்பெடுத்து வாகரை தாழ் நிலப் பரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
தொடர் மழையினால் மக்களின் அன்றாட வாழ்கை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த மக்களின் வாழ்கை வெள்ளமும் அவர்களுக்கு ஓர் பெரிதோர் தலையிடியாக இருந்ததது. மாதுறுஓயா நீர் பெருக்கமும் குளங்களில் உடைப்பெடுத்த நீர் பெருக்கமும் இம் மக்;களின் வாழ்கையில் ஈவிரக்கமின்றி பாதிப்புக்கு மேல் பாதிப்பை கொடுத்தவண்ணமே இருக்கின்றது.
வெள்ளம் மற்றும் மழை நீரினால் நிரம்பி வழியும் பால்சேனை மற்றும் அண்மித்த பிரதேசங்களிலுள்ள பொது மக்கள் பால்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பிரதேச செயலகத்தினால் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கை குழந்தைகளுடன் பெய்கின்ற மழையனால் பெரும் அவதிப்படும் தாய்மார்கள் மற்றும் வயோதிவாகள் என 493 குடும்பங்கள் தங்கவைப்பட்டுள்ளனர்.
பாடசாலையின் மாடிக்கட்டடங்கள் தான் தஞ்சமென இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேறற் பிரதியமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மக்களின் குறைகளை கேட்டறிந்தது மட்டுமின்றி தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் அறைகளுக்குச் சென்று அவர்களின் சுகாதாரம் மற்றும் அதற்கான நடவடிக்கைகளையும் அவதானித்தார்.
பால்சேனை பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிகமான பெண்கள் சிறு கை குழந்தைகளுடன் பார்வையிட்ட அமைச்சர் அவர்களுக்குரிய படுக்கை விரிப்புக்களை பகிர்ந்தளித்தார்.
சுகாதார பிரச்சனை தொடர்பாக கேட்டறிந்த அமைச்சர் சுகாதார பிரிவுகளையும் உசார்ப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
வாகரை பாதுகாப்பு பிரிவினர்களும் மக்களுக்கு தேவையான சேவைகளை மேற்கொண்டு வருவதுடன் பிரதேச செயலக பணியாளர்கள் தங்களின் சேவைகளை செய்துவருகின்றதைக் காணக்கூடியதாவுள்ளது.












