கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உயிரியல் முறைமை தொழிநுட்பவியல் சார் பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறை

(சித்தாண்டி நித்தி) கிழக்கு மாகாணத்தில் பத்தொன்பது பாடசாலைகளில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய உயர்தர தொழிநுட்ப பாடத்துறையில் உயிரியல் முறைமை தொழிநுட்ப பாடத்தை கற்கும் மாணவர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்குகளை நடாத்தும் பொருட்டு அப்பாடத்தை கற்பிற்கும் ஆசிரியர்களுடனான பலந்துரையாடல் நிகழ்வு விவசாய பீடாதிபதி கலாநிதி பொ.சிவராஜா தலைமையில் கடந்த புதன்கிழமை (10)   பல்கலைக்கழக விவசாய பீடத்தில் நடைபெற்றது. 

இக்கலந்துரையாடலின்போது உயிரியல் முறைமை தொழிநுட்பத்தை கற்பிற்கும் ஆசிரியர்கள் மற்றும் இப்பாடத்துறை கற்கும் மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு எதிர்கொள்வது எவ்வாறு என்பன தொடர்பாக ஆராயப்பட்டன. 


உயிரியல் தொழிநுட்ப பாடத்துறையை தெரிவுசெய்த மாணவர்களினது தேவைப்பாட்டினை கருத்தில்கொண்டு எதிர்வரும் 22ம் திகதி தொடக்கம் 24ம் திகதி வரை கருத்தரங்கு மற்றும் செய்முறை பயிற்சிகளை வழங்க கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீட துறையில் தேர்ச்சிபெற்ற விரிவுரையாளர்களினால் நடைபெறவுள்ளமை குறிப்படத்தக்கது. நடைபெறவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்குகளுக்குரிய ஏற்பாடுகளை கிழக்கு பல்கலைகழக விவசாய பீடம் மற்றும் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களமும் இணைந்து நாடத்தவுள்ளனர்.